القارعة
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக! | ٱلْقَارِعَةُ. ﴿1﴾ |
| 2 எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது? | مَا ٱلْقَارِعَةُ. ﴿2﴾ |
| 3 (நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ. ﴿3﴾ |
| 4 அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள். | يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ. ﴿4﴾ |
| 5 இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும். | وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ. ﴿5﴾ |
| 6 ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ, | فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ. ﴿6﴾ |
| 7 அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார். | فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ. ﴿7﴾ |
| 8 ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ, | وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ. ﴿8﴾ |
| 9 அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான். | فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ. ﴿9﴾ |
| 10 (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ. ﴿10﴾ |
| 11 (அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும். | نَارٌ حَامِيَةٌۢ. ﴿11﴾ |