الدخان
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 ஹா மீம். | حمٓ. ﴿1﴾ |
| 2 தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! | وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ. ﴿2﴾ |
| 3 நிச்சயமாக நாம் அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய) ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம். | إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍۢ مُّبَٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ. ﴿3﴾ |
| 4 இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன, | فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ. ﴿4﴾ |
| 5 நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம், | أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ. ﴿5﴾ |
| 6 (அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். | رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ. ﴿6﴾ |
| 7 வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)! | رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ. ﴿7﴾ |
| 8 அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான்; அவன்தான் உங்கள் இறைவனும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான். | لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ. ﴿8﴾ |
| 9 மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பிக்கை கொள்ளாமல்) சந்தேகத்தில் இருக்கிறார்கள்; (வீண் கேளிக்கைகளில்) விளையாடுகிறார்கள். | بَلْ هُمْ فِى شَكٍّۢ يَلْعَبُونَ. ﴿9﴾ |
| 10 ஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக! | فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍۢ مُّبِينٍۢ. ﴿10﴾ |
| 11 அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும். | يَغْشَى ٱلنَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌۭ. ﴿11﴾ |
| 12 “எங்கள் இறைவா! எங்களை விட்டு தண்டனையை நீக்கி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் (உன்னை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்கள் ஆவோம்” (என்று அழுது பிரலாபிப்பார்கள்). | رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ. ﴿12﴾ |
| 13 (தண்டனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலன் தரும்? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார். | أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مُّبِينٌۭ. ﴿13﴾ |
| 14 பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகி சென்று விட்டனர். இன்னும், (பிற மனிதர்களால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று (அவரைப் பற்றி) கூறினார்கள். | ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌۭ مَّجْنُونٌ. ﴿14﴾ |
| 15 நிச்சயமாக நாம் இந்த தண்டனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டின் பக்கமே) திரும்புவீர்கள். | إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ. ﴿15﴾ |
| 16 பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம். | يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ. ﴿16﴾ |
| 17 இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார். | ۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌۭ كَرِيمٌ. ﴿17﴾ |
| 18 (அவர் கூறினார்:) “நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.” | أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ. ﴿18﴾ |
| 19 “இன்னும், நிச்சயமாக அல்லாஹ்விற்கு முன் பெருமை அடிக்காதீர்கள்! (அவனது அடியார்கள் மீது அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.) நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.” | وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ. ﴿19﴾ |
| 20 “இன்னும், நிச்சயமாக நான் எனது இறைவனிடம்; இன்னும், உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னைக் கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.” | وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ. ﴿20﴾ |
| 21 “நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகி சென்று விடுங்கள்.” | وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ. ﴿21﴾ |
| 22 ஆக, அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் (உனக்கு எதிராக) குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்.” | فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ مُّجْرِمُونَ. ﴿22﴾ |
| 23 (இறைவன் கூறினான்:) “ஆக, என் அடியார்களை இரவில் நீர் அழைத்துச் செல்வீராக. நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.” | فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ. ﴿23﴾ |
| 24 இன்னும், கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டுவிடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள். | وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌۭ مُّغْرَقُونَ. ﴿24﴾ |
| 25 அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள். | كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ. ﴿25﴾ |
| 26 இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும் விட்டுச்சென்றார்கள்.) | وَزُرُوعٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ. ﴿26﴾ |
| 27 இன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள். | وَنَعْمَةٍۢ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ. ﴿27﴾ |
| 28 இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இன்னும், இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம். | كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ. ﴿28﴾ |
| 29 ஆக, அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் (பாவமன்னிப்பு தேடுவதற்கு) அவகாசம் கொடுக்கப்படுபவர்களாகவும் இருக்கவில்லை. | فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ. ﴿29﴾ |
| 30 இழிவுபடுத்தும் தண்டனையிலிருந்து இஸ்ரவேலர்களை திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம். | وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ. ﴿30﴾ |
| 31 ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் பெருமை அடிப்பவனாக (-அழிச்சாட்டியம் செய்பவனாக), வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான். | مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًۭا مِّنَ ٱلْمُسْرِفِينَ. ﴿31﴾ |
| 32 இன்னும், (-இஸ்ரவேலர்களின் தகுதியை) அறிந்தே (அக்கால) மக்களை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம். | وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ. ﴿32﴾ |
| 33 இன்னும், தெளிவான (பல வகையான) சோதனைகள் உள்ள அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் கொடுத்தோம். | وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْءَايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌۭا۟ مُّبِينٌ. ﴿33﴾ |
| 34 (நபியே!) நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்: | إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ. ﴿34﴾ |
| 35 “இது நமது முதல் மரணமாகவே தவிர இல்லை. இன்னும், நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.” | إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ. ﴿35﴾ |
| 36 “ஆகவே, (முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!” | فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ. ﴿36﴾ |
| 37 இவர்கள் சிறந்தவர்களா? அல்லது, துப்பஃ உடைய மக்களா? இன்னும், இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர். | أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍۢ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ. ﴿37﴾ |
| 38 இன்னும், வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் விளையாடுபவர்களாக நாம் படைக்கவில்லை. | وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ. ﴿38﴾ |
| 39 நாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள். | مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ. ﴿39﴾ |
| 40 நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும். | إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ. ﴿40﴾ |
| 41 அந்நாளில் நண்பன், நண்பனை விட்டு (உறவுக்காரன் உறவுக்காரனை விட்டு தண்டனையில்) எதையும் தடுக்க மாட்டான். இன்னும், அவர்கள் (ஆதரவு வைத்த யாராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள். | يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًۭى شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ. ﴿41﴾ |
| 42 அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர. (மற்றவர் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன். | إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ. ﴿42﴾ |
| 43 நிச்சயமாக ஸக்கூம் மரம் | إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ. ﴿43﴾ |
| 44 பாவிகளின் உணவாகும். | طَعَامُ ٱلْأَثِيمِ. ﴿44﴾ |
| 45 உருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும், | كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ. ﴿45﴾ |
| 46 கடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல். | كَغَلْىِ ٱلْحَمِيمِ. ﴿46﴾ |
| 47 அவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்! | خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ. ﴿47﴾ |
| 48 பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றுங்கள். (அதன் தண்டனை அவனை விட்டு பிரியாமல் இருக்கும்.) | ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ. ﴿48﴾ |
| 49 நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன். | ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ. ﴿49﴾ |
| 50 நிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான். | إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ. ﴿50﴾ |
| 51 நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில், | إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍۢ. ﴿51﴾ |
| 52 சொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள். | فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ. ﴿52﴾ |
| 53 அவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள். | يَلْبَسُونَ مِن سُندُسٍۢ وَإِسْتَبْرَقٍۢ مُّتَقَٰبِلِينَ. ﴿53﴾ |
| 54 இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம். | كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ. ﴿54﴾ |
| 55 அதில் எல்லா (வகையான)ப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள். அவர்கள் (நிம்மதியாக) பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். | يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ. ﴿55﴾ |
| 56 அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான். | لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ. ﴿56﴾ |
| 57 உமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும். | فَضْلًۭا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ. ﴿57﴾ |
| 58 ஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான். | فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ. ﴿58﴾ |
| 59 ஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். | فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ. ﴿59﴾ |