القلم
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 எ(ந்த இறை)வனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கிறதோ அவன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான். | نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ. ﴿1﴾ |
| 2 (நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை. | مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍۢ. ﴿2﴾ |
| 3 நிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு. | وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍۢ. ﴿3﴾ |
| 4 நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர். | وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍۢ. ﴿4﴾ |
| 5 ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள், | فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ. ﴿5﴾ |
| 6 உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று. | بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ. ﴿6﴾ |
| 7 நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து யார் வழிதவறினானோ அவனை மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான். | إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ. ﴿7﴾ |
| 8 ஆக, (நபியே! உம்மையும் உமது மார்க்கத்தையும்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்! | فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ. ﴿8﴾ |
| 9 நீர் (அவர்களுடன்) அனுசரித்து மென்மையாக போகவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரித்து மென்மையாக நடப்பார்கள். | وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ. ﴿9﴾ |
| 10 அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்! | وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍۢ مَّهِينٍ. ﴿10﴾ |
| 11 அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்! | هَمَّازٍۢ مَّشَّآءٍۭ بِنَمِيمٍۢ. ﴿11﴾ |
| 12 நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்! | مَّنَّاعٍۢ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ. ﴿12﴾ |
| 13 அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்! | عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ. ﴿13﴾ |
| 14 செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்). | أَن كَانَ ذَا مَالٍۢ وَبَنِينَ. ﴿14﴾ |
| 15 அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான். | إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ. ﴿15﴾ |
| 16 (அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம். | سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ. ﴿16﴾ |
| 17 நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்! | إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ. ﴿17﴾ |
| 18 “அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை. | وَلَا يَسْتَثْنُونَ. ﴿18﴾ |
| 19 ஆக, அவர்கள் தூங்கியவர்களாக இருந்தபோது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை(யின் படி நெருப்பு) இரவில் அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) சுற்றியது (-சூழ்ந்து கொண்டது). | فَطَافَ عَلَيْهَا طَآئِفٌۭ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ. ﴿19﴾ |
| 20 அ(ந்த தோட்டமான)து கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது. | فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ. ﴿20﴾ |
| 21 ஆக, அவர்கள் அதிகாலைபொழுதை அடைந்தபோது ஒருவரை ஒருவர் அழைத்தனர். | فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ. ﴿21﴾ |
| 22 அதாவது, நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள், நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால் (என்று அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்). | أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ. ﴿22﴾ |
| 23 ஆக, அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக புறப்பட்டு சென்றனர், | فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ. ﴿23﴾ |
| 24 அதாவது, இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அ(ந்த தோட்டத்)தில் நுழைந்து விடக்கூடாது என்று. | أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌۭ. ﴿24﴾ |
| 25 அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர். | وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍۢ قَٰدِرِينَ. ﴿25﴾ |
| 26 ஆக, அவர்கள் அ(ந்த தோட்டத்)தைப் பார்த்தபோது, “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்” என்று கூறினார்கள். | فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ. ﴿26﴾ |
| 27 “இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்” (என்றும் கூறினார்கள்). | بَلْ نَحْنُ مَحْرُومُونَ. ﴿27﴾ |
| 28 அவர்களில் நீதவான் கூறினார்: (நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று கூற வேண்டும் என்று) நான் கூறவில்லையா? (அதன்படி) நீங்கள் இன் ஷா அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டாமா! | قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ. ﴿28﴾ |
| 29 அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.” | قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ. ﴿29﴾ |
| 30 ஆக, அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர். | فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَلَٰوَمُونَ. ﴿30﴾ |
| 31 அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் எல்லை மீறியவர்களாக (அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி கெட்டவர்களாக) இருந்தோம்.” | قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ. ﴿31﴾ |
| 32 “எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த (தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் நம்பிக்கையும்) உள்ளவர்கள்.” | عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًۭا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ. ﴿32﴾ |
| 33 இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். இன்னும், மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியதாகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே! | كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ. ﴿33﴾ |
| 34 நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன. | إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ. ﴿34﴾ |
| 35 ஆக, (நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்க(ளாகிய முஸ்லிம்க)ளை, (நமது கட்டளையை மீறுகின்ற நிராகரிப்பாளர்களாகிய) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா? | أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ. ﴿35﴾ |
| 36 உங்களுக்கு என்ன ஆனது, எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்? | مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ. ﴿36﴾ |
| 37 (நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா? | أَمْ لَكُمْ كِتَٰبٌۭ فِيهِ تَدْرُسُونَ. ﴿37﴾ |
| 38 (அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?” | إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ. ﴿38﴾ |
| 39 நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?) | أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ. ﴿39﴾ |
| 40 (நபியே!) அவர்களிடம் கேட்பீராக! “அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?” | سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ. ﴿40﴾ |
| 41 (இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? ஆக, அவர்கள் (தங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் (அந்த) கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) கொண்டு வரட்டும். | أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ. ﴿41﴾ |
| 42 கெண்டைக்கால் காண்பிக்கப்படுகிற நாளில் (தங்கள் கூட்டாளிகளை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிவதற்கு அழைக்கப்படுவார்கள். ஆக, அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள். | يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍۢ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ. ﴿42﴾ |
| 43 அவர்களின் பார்வைகள் தாழ்ந்தவையாக இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலக வாழ்க்கையில்,) சுகமானவர்களாக இருந்தபோது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.) | خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ. ﴿43﴾ |
| 44 ஆக, என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்கு சூழ்ச்சி செய்வோம் (-கொஞ்சம் சுகம் கொடுத்து திடீரென தண்டிப்போம்). | فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ. ﴿44﴾ |
| 45 இன்னும், அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக உறுதியானது. | وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ. ﴿45﴾ |
| 46 (நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கிறீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா? | أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ. ﴿46﴾ |
| 47 அவர்களிடம் மறைவானவை இருக்கிறதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை, அதாவது, முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல) அவர்கள் (அதில்) எழுதுகிறார்களா? | أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ. ﴿47﴾ |
| 48 ஆக, (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர் - அவரோ கடும் துயரத்தில் மூழ்கியவராக இருக்கும் நிலையில் (தனது இறைவனை) அழைத்த நேரத்தில் (அவர் அவசரப்பட்டது போன்று அவசரப்பட்டு விடாதீர்! அவர் கோபப்பட்டது போன்று கோபப்பட்டு விடாதீர்)! | فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌۭ. ﴿48﴾ |
| 49 அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான, ஆபத்தான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராக இருந்தார். | لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌۭ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌۭ. ﴿49﴾ |
| 50 ஆக, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். ஆக, அவரை நல்லவர்களில் ஆக்கினான். | فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ. ﴿50﴾ |
| 51 நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை (உம்மிடமிருந்து அவர்கள்) செவியுற்றபோது. இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்” என்று. | وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌۭ. ﴿51﴾ |
| 52 (குர்ஆனாகிய) இது, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர இல்லை. | وَمَا هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ. ﴿52﴾ |