الحاقة
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக! | ٱلْحَآقَّةُ. ﴿1﴾ |
| 2 உண்மையான நிகழ்வு என்றால் என்ன? | مَا ٱلْحَآقَّةُ. ﴿2﴾ |
| 3 உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!? | وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ. ﴿3﴾ |
| 4 ஸமூது சமுதாயமும் ஆது சமுதாயமும் (உள்ளங்களை) தட்டக்கூடிய (திடுக்கிட செய்கின்ற) மறுமை நாளை பொய்ப்பித்தனர். | كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ. ﴿4﴾ |
| 5 ஆக, ஸமூது சமுதாயம் அளவு கடந்த சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர். | فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ. ﴿5﴾ |
| 6 ஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். | وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ. ﴿6﴾ |
| 7 அவன், அதை (-அந்த காற்றை) ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள் மீது தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆக, அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர். அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீச்ச மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் இருந்தனர். | سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ. ﴿7﴾ |
| 8 ஆக, அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா? | فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ. ﴿8﴾ |
| 9 ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னுள்ளவர்களும், தலைகீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர். | وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ. ﴿9﴾ |
| 10 ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் (-தண்டனையால்) அவன் அவர்களைப் பிடித்தான் (-தண்டித்தான்). | فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً. ﴿10﴾ |
| 11 தண்ணீர் மிக அதிகமானபோது நிச்சயமாக நாம் உங்க(ள் முன்னோர்களான நூஹுடன் நம்பிக்கை கொண்டவர்க)ளை கப்பலில் ஏற்றினோம். | إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ. ﴿11﴾ |
| 12 (நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட) அ(ந்த சம்பவத்)தை உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகிற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்). | لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةًۭ وَتَعِيَهَآ أُذُنٌۭ وَٰعِيَةٌۭ. ﴿12﴾ |
| 13 ஆக, எக்காளத்தில் ஒரு முறை ஊதப்பட்டால், | فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌۭ وَٰحِدَةٌۭ. ﴿13﴾ |
| 14 பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால், | وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةًۭ وَٰحِدَةًۭ. ﴿14﴾ |
| 15 ஆக, அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை நாளான)து நிகழும். | فَيَوْمَئِذٍۢ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ. ﴿15﴾ |
| 16 இன்னும், வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். ஆக, அந்நாளில் அது பலவீனமடைந்திருக்கும். | وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ. ﴿16﴾ |
| 17 இன்னும், வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் அவர்களுக்கு மேல் சுமப்பார்கள். | وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ. ﴿17﴾ |
| 18 அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களி(ல் ரகசியங்களி)ல் இருந்து மறையக்கூடியது எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது. | يَوْمَئِذٍۢ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌۭ. ﴿18﴾ |
| 19 ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!” | فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ. ﴿19﴾ |
| 20 “நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.” | إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ. ﴿20﴾ |
| 21 ஆக, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில், | فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ. ﴿21﴾ |
| 22 உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார். | فِى جَنَّةٍ عَالِيَةٍۢ. ﴿22﴾ |
| 23 அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும். | قُطُوفُهَا دَانِيَةٌۭ. ﴿23﴾ |
| 24 நீங்கள் (உலகத்தில் வாழ்ந்த அந்த) முடிந்துபோன நாள்களில் (உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்திய (நல்ல) செயல்களின் காரணமாக (இந்த சொர்க்கத்தில்) இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்! | كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ. ﴿24﴾ |
| 25 ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!” | وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ. ﴿25﴾ |
| 26 “எனது கூலி என்னவாக இருக்கும் என்று நான் அறியமாட்டேன்.” | وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ. ﴿26﴾ |
| 27 “(உலகத்தில் எனக்கு நிகழ்ந்த எனது மரணம்,) அதுவே (எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)” | يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ. ﴿27﴾ |
| 28 “எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!” | مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ. ﴿28﴾ |
| 29 “எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.” | هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ. ﴿29﴾ |
| 30 (அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!” | خُذُوهُ فَغُلُّوهُ. ﴿30﴾ |
| 31 “பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!” | ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ. ﴿31﴾ |
| 32 “பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.) | ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ. ﴿32﴾ |
| 33 நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான். | إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ. ﴿33﴾ |
| 34 இன்னும், ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான். | وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ. ﴿34﴾ |
| 35 ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கிற) நெருக்கமான நண்பர் (யாரும்) இருக்க மாட்டார். | فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌۭ. ﴿35﴾ |
| 36 இன்னும், (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர. | وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍۢ. ﴿36﴾ |
| 37 அதை சாப்பிட மாட்டார்கள், பாவிகளைத் தவிர! | لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ. ﴿37﴾ |
| 38 (இறை வேதத்தை பொய்ப்பிக்கின்ற பாவிகளே!) நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதன் மீது நான் சத்தியம் செய்கிறேன்! | فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ. ﴿38﴾ |
| 39 இன்னும், நீங்கள் எதை பார்க்க மாட்டீர்களோ அதன் மீதும் (சத்தியம் செய்கிறேன்)! | وَمَا لَا تُبْصِرُونَ. ﴿39﴾ |
| 40 நிச்சயமாக (இறைவனின் வேதமான) இது (முஹம்மது ஆகிய நமது) கண்ணியமான தூதர் மூலமாக ஓதப்படுகிற வசனங்களாகும். | إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ. ﴿40﴾ |
| 41 இது, கவிஞரின் பேச்சல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள். | وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۢ ۚ قَلِيلًۭا مَّا تُؤْمِنُونَ. ﴿41﴾ |
| 42 இன்னும், இது ஜோசியக்காரனின் பேச்சுமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள். | وَلَا بِقَوْلِ كَاهِنٍۢ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ. ﴿42﴾ |
| 43 இது, அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும். | تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ. ﴿43﴾ |
| 44 அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி பேசினால், | وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ. ﴿44﴾ |
| 45 நாம் அவரை பலமாக பிடித்திருப்போம். | لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ. ﴿45﴾ |
| 46 பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம். | ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ. ﴿46﴾ |
| 47 ஆக, உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை. | فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ. ﴿47﴾ |
| 48 நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும். | وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌۭ لِّلْمُتَّقِينَ. ﴿48﴾ |
| 49 நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம். | وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ. ﴿49﴾ |
| 50 நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு மிகத் துக்கமானதாகும். | وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ. ﴿50﴾ |
| 51 நிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும். | وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ. ﴿51﴾ |
| 52 ஆக, மிக மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக! | فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ. ﴿52﴾ |