نوح
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார். | إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ. ﴿1﴾ |
| 2 அவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.” | قَالَ يَٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌ. ﴿2﴾ |
| 3 “அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்! | أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ. ﴿3﴾ |
| 4 அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!” | يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ. ﴿4﴾ |
| 5 அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன். | قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًۭا وَنَهَارًۭا. ﴿5﴾ |
| 6 ஆனால், எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, (அவர்கள் எனது அழைப்பிலிருந்து) விரண்டு ஓடுவதைத் தவிர. | فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًۭا. ﴿6﴾ |
| 7 நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும், (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். பெருமையடித்தனர். | وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًۭا. ﴿7﴾ |
| 8 பிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன். | ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًۭا. ﴿8﴾ |
| 9 பிறகு, நிச்சயமாக நான் அவர்களிடம் (பொது இடத்தில்) வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக இரகசியமாகப் பேசினேன். | ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًۭا. ﴿9﴾ |
| 10 ஆக, நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான். | فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًۭا. ﴿10﴾ |
| 11 அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான். | يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا. ﴿11﴾ |
| 12 இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான். | وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّٰتٍۢ وَيَجْعَل لَّكُمْ أَنْهَٰرًۭا. ﴿12﴾ |
| 13 உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை (மகத்துவத்தை) நீங்கள் பயப்படுவதில்லை? | مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًۭا. ﴿13﴾ |
| 14 திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான். | وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا. ﴿14﴾ |
| 15 ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் எப்படி படைத்தான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? | أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا. ﴿15﴾ |
| 16 இன்னும் அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான். | وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًۭا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًۭا. ﴿16﴾ |
| 17 இன்னும், அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (முதல் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினான். இன்னும் உங்கள் மூல சத்தை மண்ணிலிருந்து உருவாக்குகிறான்.) | وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًۭا. ﴿17﴾ |
| 18 பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும், (அதிலிருந்து) அவன் உங்களை (பூமியிலிருந்து) வெளியேற்றுவான். | ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًۭا. ﴿18﴾ |
| 19 இன்னும், அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான், | وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًۭا. ﴿19﴾ |
| 20 அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக. | لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًۭا فِجَاجًۭا. ﴿20﴾ |
| 21 நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (நன்மையை) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர்.” (அவர்கள் தாமும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிற வசதிபடைத்த தலைவர்களைத்தான் பின்பற்றினார்கள்.) | قَالَ نُوحٌۭ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًۭا. ﴿21﴾ |
| 22 இன்னும், (இந்த மார்க்கத்தை எதிர்ப்பதற்கு) மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள். | وَمَكَرُوا۟ مَكْرًۭا كُبَّارًۭا. ﴿22﴾ |
| 23 இன்னும், (தங்கள் மக்களை நோக்கி) கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள். | وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّۭا وَلَا سُوَاعًۭا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًۭا. ﴿23﴾ |
| 24 அவர்கள் பலரை வழி கெடுத்தனர். ஆகவே, (என் இறைவா!) அநியாயக்காரர்களுக்கு நீ அதிகப்படுத்தாதே, வழிகேட்டைத் தவிர! | وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًۭا ۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلًۭا. ﴿24﴾ |
| 25 அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். உடனே நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். ஆக, அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை. | مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًۭا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًۭا. ﴿25﴾ |
| 26 இன்னும், நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களிலிருந்து பூமியில் வசிப்பவராக எவரையும் நீ விட்டுவிடாதே! | وَقَالَ نُوحٌۭ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَٰفِرِينَ دَيَّارًا. ﴿26﴾ |
| 27 நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டுவிட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை, நம்பிக்கையாளர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (அவர்களும் வழிகெட்டு, தாங்கள் பிள்ளைகளையும் வழிகெடுப்பார்கள்.) | إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًۭا كَفَّارًۭا. ﴿27﴾ |
| 28 என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அதிகப்படுத்தாதே, அழிவைத் தவிர! | رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا. ﴿28﴾ |