الجن
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 நிச்சயமாக நாம் நூஹை - அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) - அனுப்பினோம். ஏனெனில், நீர் உமது மக்களை - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் - எச்சரிப்பீராக! | قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌۭ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًۭا. ﴿1﴾ |
| 2 அது, நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; இன்னும், எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். | يَهْدِىٓ إِلَى ٱلرُّشْدِ فَـَٔامَنَّا بِهِۦ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَآ أَحَدًۭا. ﴿2﴾ |
| 3 நிச்சயமாக விஷயமாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் (தனக்கு) மனைவியையும் பிள்ளைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. | وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةًۭ وَلَا وَلَدًۭا. ﴿3﴾ |
| 4 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, எங்களில் உள்ள (-இப்லீஸ் ஆகிய) மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (-உண்மைக்கு புறம்பான விஷயத்)தை கூறுபவனாக இருந்தான். | وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطًۭا. ﴿4﴾ |
| 5 இன்னும், “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம். | وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبًۭا. ﴿5﴾ |
| 6 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஆண் ஜின்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர். | وَأَنَّهُۥ كَانَ رِجَالٌۭ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍۢ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًۭا. ﴿6﴾ |
| 7 இன்னும் நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் (-ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர். | وَأَنَّهُمْ ظَنُّوا۟ كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ ٱللَّهُ أَحَدًۭا. ﴿7﴾ |
| 8 இன்னும், நிச்சயமாக நாங்கள் வானத்தை (சென்றடைய)த் தேடினோம். ஆக, அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம். | وَأَنَّا لَمَسْنَا ٱلسَّمَآءَ فَوَجَدْنَٰهَا مُلِئَتْ حَرَسًۭا شَدِيدًۭا وَشُهُبًۭا. ﴿8﴾ |
| 9 இன்னும், நிச்சயமாக நாங்கள் அ(ந்த வானத்)தில் பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். ஆக, இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவரை (எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார். | وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَٰعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ ٱلْءَانَ يَجِدْ لَهُۥ شِهَابًۭا رَّصَدًۭا. ﴿9﴾ |
| 10 இன்னும், நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம், “பூமியில் உள்ளவர்களுக்கு தீமை ஏதும் நாடப்பட்டதா? அல்லது, அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடினானா?” என்று. | وَأَنَّا لَا نَدْرِىٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِى ٱلْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًۭا. ﴿10﴾ |
| 11 இன்னும் நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும், எங்களில் அவர்கள் அல்லாத மற்ற (தீய)வர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம். | وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَآئِقَ قِدَدًۭا. ﴿11﴾ |
| 12 இன்னும், நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், அதாவது “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க அறவே முடியாது; இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் நாங்கள் எங்கும் தப்பிக்க முடியாது)” என்று. | وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعْجِزَ ٱللَّهَ فِى ٱلْأَرْضِ وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًۭا. ﴿12﴾ |
| 13 இன்னும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்றபோது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். ஆக, எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் பயப்படமாட்டார். | وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ ۖ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًۭا وَلَا رَهَقًۭا. ﴿13﴾ |
| 14 இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இன்னும், எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். ஆக, எவர் இஸ்லாமை ஏற்றாரோ அத்தகையவர்கள்தான் நேர்வழியை நன்கு ஆராய்ந்து தேடிப் பெற்றார்கள். | وَأَنَّا مِنَّا ٱلْمُسْلِمُونَ وَمِنَّا ٱلْقَٰسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُو۟لَٰٓئِكَ تَحَرَّوْا۟ رَشَدًۭا. ﴿14﴾ |
| 15 ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொல்லிகளாக இருக்கிறார்கள். | وَأَمَّا ٱلْقَٰسِطُونَ فَكَانُوا۟ لِجَهَنَّمَ حَطَبًۭا. ﴿15﴾ |
| 16 இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் இணைந்து உறுதியாக இருந்திருந்தால் நாம் (அவர்களுக்கு தேவையான) பலன் தரக்கூடிய அதிகமான சுத்தமான நீரை நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம் (-அவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக ஆக்கி இருப்போம்). | وَأَلَّوِ ٱسْتَقَٰمُوا۟ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسْقَيْنَٰهُم مَّآءً غَدَقًۭا. ﴿16﴾ |
| 17 (அவர்களுக்கு வாழ்க்கை வசதியை நாம் கொடுப்பதாவது, அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக ஆகும். இன்னும், எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை மிகக் கடினமான சிரமமான தண்டனையில் அவன் புகுத்துவான். | لِّنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِۦ يَسْلُكْهُ عَذَابًۭا صَعَدًۭا. ﴿17﴾ |
| 18 இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்! | وَأَنَّ ٱلْمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا۟ مَعَ ٱللَّهِ أَحَدًۭا. ﴿18﴾ |
| 19 இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அவனை வணங்குவதற்காக நின்றபோது அவர்கள் (-அரேபியர்கள்) எல்லோரும் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர். | وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبْدُ ٱللَّهِ يَدْعُوهُ كَادُوا۟ يَكُونُونَ عَلَيْهِ لِبَدًۭا. ﴿19﴾ |
| 20 (நபியே!) கூறுவீராக! நான் வணங்குவதெல்லாம் என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன். | قُلْ إِنَّمَآ أَدْعُوا۟ رَبِّى وَلَآ أُشْرِكُ بِهِۦٓ أَحَدًۭا. ﴿20﴾ |
| 21 (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களுக்கு கெடுதிக்கோ (-உங்களை விட்டும் அதை அகற்றுவதற்கும்) நல்லதுக்கோ (-உங்களுக்கு அதை செய்து தருவதற்கோ) சக்தி பெறமாட்டேன். | قُلْ إِنِّى لَآ أَمْلِكُ لَكُمْ ضَرًّۭا وَلَا رَشَدًۭا. ﴿21﴾ |
| 22 (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் அறவே காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன். | قُلْ إِنِّى لَن يُجِيرَنِى مِنَ ٱللَّهِ أَحَدٌۭ وَلَنْ أَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا. ﴿22﴾ |
| 23 (எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். | إِلَّا بَلَٰغًۭا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦ ۚ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا. ﴿23﴾ |
| 24 இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறிந்து கொள்வார்கள், “எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர்” என்று. | حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًۭا وَأَقَلُّ عَدَدًۭا. ﴿24﴾ |
| 25 (நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதை எச்சரிக்கப்படுகிறீர்களோ அது சமீபமாக உள்ளதா? அல்லது, அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன்.” | قُلْ إِنْ أَدْرِىٓ أَقَرِيبٌۭ مَّا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُۥ رَبِّىٓ أَمَدًا. ﴿25﴾ |
| 26 (அவன்தான்) மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். ஆக, அவன், தனது மறைவான விஷயங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான். | عَٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا. ﴿26﴾ |
| 27 எனினும், அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. ஆக, (அவர்களுக்கு மட்டும் மறைவான விஷயங்களில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்குப் பின்னாலிருந்தும் (கண்காணிக்கின்ற) பாதுகாவலர்களை அனுப்புவான். | إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍۢ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًۭا. ﴿27﴾ |
| 28 அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மத் நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்தறிவான். இன்னும், எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான். | لِّيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا۟ رِسَٰلَٰتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَىْءٍ عَدَدًۢا. ﴿28﴾ |