Loading date... | Loading Hijri date... | Loading time...

القيامة

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 போர்வை போர்த்தியவரே! لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ. ﴿1﴾
2 இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்! وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ. ﴿2﴾
3 மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று? أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ. ﴿3﴾
4 ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குலம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம். بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ. ﴿4﴾
5 மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான். بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ. ﴿5﴾
6 மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான். يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ. ﴿6﴾
7 ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால், فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ. ﴿7﴾
8 இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால், وَخَسَفَ ٱلْقَمَرُ. ﴿8﴾
9 இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால், وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ. ﴿9﴾
10 அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?” يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ. ﴿10﴾
11 அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது). كَلَّا لَا وَزَرَ. ﴿11﴾
12 அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது. إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ. ﴿12﴾
13 மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான். يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ. ﴿13﴾
14 மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.) بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ. ﴿14﴾
15 அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது). وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ. ﴿15﴾
16 (நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர். لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ. ﴿16﴾
17 நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும். إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ. ﴿17﴾
18 ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்பீராக!) فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ. ﴿18﴾
19 பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும். ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ. ﴿19﴾
20 அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள். كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ. ﴿20﴾
21 இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள். وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ. ﴿21﴾
22 அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும். وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ. ﴿22﴾
23 தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும். إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ. ﴿23﴾
24 இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும். وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ. ﴿24﴾
25 அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அது அறிந்துகொள்ளும். تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ. ﴿25﴾
26 அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால், كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ. ﴿26﴾
27 இன்னும், ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டால், وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ. ﴿27﴾
28 இன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால், وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ. ﴿28﴾
29 இன்னும், (மறுமை எனும்) கெண்டைக் காலுடன் (உலகம் எனும்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.) وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ. ﴿29﴾
30 அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.) إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ. ﴿30﴾
31 ஆக, அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை. فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ. ﴿31﴾
32 எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான். وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ. ﴿32﴾
33 பிறகு, அவன் தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான். ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ. ﴿33﴾
34 உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான். أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ. ﴿34﴾
35 பிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான். ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ. ﴿35﴾
36 மனிதன், எண்ணுகிறானா, தான் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுவான் என்று? أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى. ﴿36﴾
37 அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா? أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ. ﴿37﴾
38 பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். ஆக, (அவனை இறைவன்) படைத்தான். இன்னும், (அவனை முழு மனிதனாக பார்ப்பவனாக செவியுறுபவனாக பேசுபவனாக) சரிப்படுத்தினான். ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ. ﴿38﴾
39 ஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான். فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ. ﴿39﴾
40 இ(த்தகைய பேராற்றல் உள்ள இறை)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ. ﴿40﴾