المرسلات
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 காலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூறப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை? | وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا. ﴿1﴾ |
| 2 அதிவேகமாக வீசுகிற புயல்காற்றுகள் மீது சத்தியமாக! | فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا. ﴿2﴾ |
| 3 (மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக! | وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا. ﴿3﴾ |
| 4 (உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடிய அத்தாட்சிகள் மீது சத்தியமாக! | فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا. ﴿4﴾ |
| 5 (நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக! | فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا. ﴿5﴾ |
| 6 (அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)! | عُذْرًا أَوْ نُذْرًا. ﴿6﴾ |
| 7 நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும். | إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ. ﴿7﴾ |
| 8 ஆக, நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது, | فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ. ﴿8﴾ |
| 9 இன்னும், வானம் பிளக்கப்படும்போது, | وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ. ﴿9﴾ |
| 10 இன்னும், மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது, | وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ. ﴿10﴾ |
| 11 இன்னும், தூதர்கள் (மறுமையில் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்வதற்காக) நேரம் குறிக்கப்படும்போது, | وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ. ﴿11﴾ |
| 12 எந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!? | لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ. ﴿12﴾ |
| 13 (ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் நேரம் குறிக்கப்பட்டுள்ளார்கள்). | لِيَوْمِ ٱلْفَصْلِ. ﴿13﴾ |
| 14 தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ. ﴿14﴾ |
| 15 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿15﴾ |
| 16 (நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா? | أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ. ﴿16﴾ |
| 17 பிறகு, (அவர்களுக்கு பின்னர் வந்த நிராகரிப்பாளர்களான) பின்னோர்கள் (நிராகரிப்பிலும் பிறகு தண்டனை அனுபவிப்பதிலும்) அவர்(களின் முன்னோர்)களை பின்தொடரும்படி செய்தோம். | ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ. ﴿17﴾ |
| 18 இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம். | كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ. ﴿18﴾ |
| 19 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿19﴾ |
| 20 பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா? | أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ. ﴿20﴾ |
| 21 ஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம், | فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ. ﴿21﴾ |
| 22 குறிப்பிட்ட ஒரு தவணை வரை. | إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ. ﴿22﴾ |
| 23 ஆக, நாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள். | فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ. ﴿23﴾ |
| 24 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿24﴾ |
| 25 பூமியை (அது தனக்குள்) ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா, | أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا. ﴿25﴾ |
| 26 (அது தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா)? | أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا. ﴿26﴾ |
| 27 இன்னும், அதில் மிக உயரமான (பெரிய) மலைகளை நாம் ஆக்கினோம். இன்னும், உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம். | وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا. ﴿27﴾ |
| 28 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿28﴾ |
| 29 நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்! | ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ. ﴿29﴾ |
| 30 மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்! | ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ. ﴿30﴾ |
| 31 அது நிழல்தரக்கூடியது அல்ல. இன்னும், அது (நெருப்பின்) ஜுவாலையிலிருந்து தடுக்காது. | لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ. ﴿31﴾ |
| 32 நிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்! | إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ. ﴿32﴾ |
| 33 அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்! | كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ. ﴿33﴾ |
| 34 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿34﴾ |
| 35 இது அவர்கள் பேசாத நாளாகும். | هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ. ﴿35﴾ |
| 36 இன்னும், அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் சாக்குபோக்குகள் கூறுவதற்கு. | وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ. ﴿36﴾ |
| 37 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿37﴾ |
| 38 இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் (உங்கள்) முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம். | هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ. ﴿38﴾ |
| 39 ஆக, உங்களிடம் (எனக்கு எதிராக தீங்கு செய்வதற்கு; அல்லது, நீங்கள் எனது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு (அந்த) சூழ்ச்சி(யை) செய்யுங்கள். | فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ. ﴿39﴾ |
| 40 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿40﴾ |
| 41 நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் (அடர்த்தியான மரங்களின்) நிழல்களிலும் ஊற்றுகளிலும், | إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ. ﴿41﴾ |
| 42 அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.) | وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ. ﴿42﴾ |
| 43 நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (-உங்கள் நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக (இவற்றை) உண்ணுங்கள்! பருகுங்கள்! | كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ. ﴿43﴾ |
| 44 நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம். | إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ. ﴿44﴾ |
| 45 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿45﴾ |
| 46 (இவ்வுலகில்) சிறிது காலம் உண்ணுங்கள்! சுகம் அனுபவியுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள் ஆவீர்கள்! | كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ. ﴿46﴾ |
| 47 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿47﴾ |
| 48 தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள். | وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ. ﴿48﴾ |
| 49 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்! | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿49﴾ |
| 50 ஆக, (இந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) இதற்கு பின்னர் வேறு எந்த (வேத) செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்? | فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ. ﴿50﴾ |