النازعات
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 எதைப் பற்றி அவர்கள் (தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்? | وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا. ﴿1﴾ |
| 2 (நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக! | وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا. ﴿2﴾ |
| 3 நீந்துவோர் மீது சத்தியமாக! | وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا. ﴿3﴾ |
| 4 (இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக! | فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا. ﴿4﴾ |
| 5 காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,) | فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا. ﴿5﴾ |
| 6 பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில். | يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ. ﴿6﴾ |
| 7 பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும். | تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ. ﴿7﴾ |
| 8 அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும். | قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ. ﴿8﴾ |
| 9 அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும். | أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ. ﴿9﴾ |
| 10 (நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’ | يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ. ﴿10﴾ |
| 11 (அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா? | أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ. ﴿11﴾ |
| 12 அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.) | قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ. ﴿12﴾ |
| 13 (மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.) | فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ. ﴿13﴾ |
| 14 அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள். | فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ. ﴿14﴾ |
| 15 (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா? | هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ. ﴿15﴾ |
| 16 “துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள். | إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى. ﴿16﴾ |
| 17 ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான். | ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ. ﴿17﴾ |
| 18 ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?” | فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ. ﴿18﴾ |
| 19 “இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?” | وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ. ﴿19﴾ |
| 20 ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார். | فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ. ﴿20﴾ |
| 21 ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான். | فَكَذَّبَ وَعَصَىٰ. ﴿21﴾ |
| 22 பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான். | ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ. ﴿22﴾ |
| 23 இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான். | فَحَشَرَ فَنَادَىٰ. ﴿23﴾ |
| 24 இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான். | فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ. ﴿24﴾ |
| 25 ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்). | فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ. ﴿25﴾ |
| 26 (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. | إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ. ﴿26﴾ |
| 27 (மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான். | ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا. ﴿27﴾ |
| 28 அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.) | رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا. ﴿28﴾ |
| 29 இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான். | وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا. ﴿29﴾ |
| 30 இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான். | وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ. ﴿30﴾ |
| 31 அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான். | أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا. ﴿31﴾ |
| 32 இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான். | وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا. ﴿32﴾ |
| 33 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்). | مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ. ﴿33﴾ |
| 34 ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால், | فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ. ﴿34﴾ |
| 35 மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்). | يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ. ﴿35﴾ |
| 36 இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.) | وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ. ﴿36﴾ |
| 37 ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ, | فَأَمَّا مَن طَغَىٰ. ﴿37﴾ |
| 38 இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ, | وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا. ﴿38﴾ |
| 39 (அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும். | فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ. ﴿39﴾ |
| 40 ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ, | وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ. ﴿40﴾ |
| 41 (அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும். | فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ. ﴿41﴾ |
| 42 (நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள். | يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا. ﴿42﴾ |
| 43 (எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!) | فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ. ﴿43﴾ |
| 44 உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது. | إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ. ﴿44﴾ |
| 45 (நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.) | إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا. ﴿45﴾ |
| 46 அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும். | كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا. ﴿46﴾ |