الانفطار
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (உலக முடிவுக்காக) சூரியன் (ஒளி) மங்கவைக்கப்படும்போது, | إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ. ﴿1﴾ |
| 2 இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது, | وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ. ﴿2﴾ |
| 3 இன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது, | وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ. ﴿3﴾ |
| 4 இன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது, | وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ. ﴿4﴾ |
| 5 (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும், அது முற்படுத்தியதையும், அது பிற்படுத்தியதையும் அறிந்து கொள்ளும். (-ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மையையும் தீமையையும், அவ்வாறே தனக்கு பின்னர் வருவோர் தன்னை பின்பற்றும்படி வழிகாட்டிவிட்டு வந்த நல்ல காரியத்தை; அல்லது, தீய காரியத்தை அறிந்து கொள்ளும்.) | عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ. ﴿5﴾ |
| 6 மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? | يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ. ﴿6﴾ |
| 7 அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான். | ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ. ﴿7﴾ |
| 8 எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான். | فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ. ﴿8﴾ |
| 9 அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள். | كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ. ﴿9﴾ |
| 10 நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். | وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ. ﴿10﴾ |
| 11 (அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். | كِرَامًۭا كَٰتِبِينَ. ﴿11﴾ |
| 12 நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.) | يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ. ﴿12﴾ |
| 13 நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். | إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ. ﴿13﴾ |
| 14 இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள். | وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ. ﴿14﴾ |
| 15 (அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். | يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ. ﴿15﴾ |
| 16 இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை. | وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ. ﴿16﴾ |
| 17 இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ. ﴿17﴾ |
| 18 பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ. ﴿18﴾ |
| 19 (அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்! | يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ. ﴿19﴾ |