المطففين
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 மோசடிக்காரர்களுக்கு நாசம்தான். | وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ. ﴿1﴾ |
| 2 அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள். | ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ. ﴿2﴾ |
| 3 இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்). | وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ. ﴿3﴾ |
| 4 “நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா? | أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ. ﴿4﴾ |
| 5 மகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்). | لِيَوْمٍ عَظِيمٍۢ. ﴿5﴾ |
| 6 அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள். | يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ. ﴿6﴾ |
| 7 அவ்வாறல்ல! நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும். | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ. ﴿7﴾ |
| 8 இன்னும், சிஜ்ஜீன் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ. ﴿8﴾ |
| 9 (அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும். | كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ. ﴿9﴾ |
| 10 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ. ﴿10﴾ |
| 11 அவர்கள் கூலி (கொடுக்கப்படும்) நாளைப் பொய்ப்பிக்கிறார்கள். | ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ. ﴿11﴾ |
| 12 அதைப் பொய்ப்பிக்க மாட்டார், ஒவ்வொரு பெரும் பாவியும் எல்லை மீறுகிறவனும் தவிர! | وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ. ﴿12﴾ |
| 13 அவனுக்கு முன்னர் நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான். | إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ. ﴿13﴾ |
| 14 அவ்வாறல்ல! மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது கறையாகப் படிந்து மூடிவிட்டன. | كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ. ﴿14﴾ |
| 15 அவ்வாறல்ல! நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் திட்டமாக தடுக்கப்படுவார்கள். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.) | كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ. ﴿15﴾ |
| 16 பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீயில் நிரந்தரமாக) எரியக் கூடியவர்கள்தான். | ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ. ﴿16﴾ |
| 17 பிறகு, “நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த (நாளான)து இதுதான்’’ என்று (அவர்களுக்கு) கூறப்படும். | ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ. ﴿17﴾ |
| 18 அவ்வாறல்ல! நிச்சயமாக நல்லோரின் பதிவேடு திட்டமாக இல்லிய்யூனில் இருக்கும். | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ. ﴿18﴾ |
| 19 (நபியே!) ‘இல்லிய்யூன்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ. ﴿19﴾ |
| 20 அது (நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும். | كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ. ﴿20﴾ |
| 21 (அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (வான)வர்கள் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள். | يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ. ﴿21﴾ |
| 22 நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். | إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ. ﴿22﴾ |
| 23 கட்டில்கள் மீது (சாய்ந்தவர்களாக சொர்க்கத்தின் அருட்கொடைகளை) கண்டுகளிப்பார்கள். | عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ. ﴿23﴾ |
| 24 அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (பிரகாசத்தை, அழகை நபியே! நீர்) அறிவீர். | تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ. ﴿24﴾ |
| 25 முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து (அவர்கள் விரும்பியதை, விரும்பிய அளவு) புகட்டப்படுவார்கள். | يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ. ﴿25﴾ |
| 26 அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும். | خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ. ﴿26﴾ |
| 27 இன்னும் அதன் கலவை தஸ்னீமிலிருந்து இருக்கும். | وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ. ﴿27﴾ |
| 28 (தஸ்னீம் அது) ஒரு நீரூற்றாகும், (அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (நல்ல)வர்கள் அதில் பருகுவார்கள். | عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ. ﴿28﴾ |
| 29 நிச்சயமாக குற்றவாளிகள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து (கேலி செய்து) சிரிப்பவர்களாக இருந்தார்கள். | إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ. ﴿29﴾ |
| 30 இன்னும், அவர்கள், இவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கேலியாக கண் சாடை செய்கிறார்கள். | وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ. ﴿30﴾ |
| 31 இன்னும், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பும்போது (நம்பிக்கையாளர்களை கேலி செய்தது பற்றி) மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகிறார்கள். | وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ. ﴿31﴾ |
| 32 இன்னும், அவர்கள் இவர்களைப் பார்க்கும்போது “நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்’’ எனக் கூறுகிறார்கள். | وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ. ﴿32﴾ |
| 33 (இக்குற்றவாளிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே! | وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ. ﴿33﴾ |
| 34 ஆக, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள். | فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ. ﴿34﴾ |
| 35 கட்டில்கள் மீது அமர்ந்தவர்களாக (அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள். | عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ. ﴿35﴾ |
| 36 நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா (இல்லையா)? | هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ. ﴿36﴾ |