Loading date... | Loading Hijri date... | Loading time...

الطارق

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 கோள்களை உடைய வானத்தின் மீது சத்தியமாக! وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ. ﴿1﴾
2 (நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ. ﴿2﴾
3 (அது) மின்னக்கூடிய பிரகாசிக்கக்கூடிய நட்சத்திரமாகும். ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ. ﴿3﴾
4 ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது (அதன் செயலை கண்காணிக்கிற) ஒரு காவலர் இருந்தே தவிர. إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ. ﴿4﴾
5 ஆக, மனிதன், அவன் எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும். فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ. ﴿5﴾
6 வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான். خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ. ﴿6﴾
7 அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது. يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ. ﴿7﴾
8 நிச்சயமாக அவன், அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல்மிக்கவன் ஆவான், إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ. ﴿8﴾
9 இரகசியங்கள் சோதிக்கப்படுகிற (பகிரங்கப்படுத்தப்படுகிற) நாளில். يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ. ﴿9﴾
10 ஆக, அவனுக்கு (-மனிதனுக்கு) சக்தி ஏதும் இருக்காது; உதவியாளர் யாரும் இருக்க மாட்டார். فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ. ﴿10﴾
11 (மீண்டும் மீண்டும்) மழையை பொழியக்கூடிய வானத்தின் மீது சத்தியமாக! وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ. ﴿11﴾
12 தாவரங்களை முளைக்க செய்கிற பூமியின் மீது சத்தியமாக! وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ. ﴿12﴾
13 நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதமாகும். إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ. ﴿13﴾
14 இது, விளையாட்டு அல்ல. (-பொய்யான, கேலியான பேச்சல்ல). وَمَا هُوَ بِٱلْهَزْلِ. ﴿14﴾
15 நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا. ﴿15﴾
16 நானும் சூழ்ச்சி செய்கிறேன். وَأَكِيدُ كَيْدًۭا. ﴿16﴾
17 ஆக, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்கு சிறிது காலம் அவகாசமளிப்பீராக! فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا. ﴿17﴾