الأعلى
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரங்கள்) மீது சத்தியமாக! | سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى. ﴿1﴾ |
| 2 அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான். | ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ. ﴿2﴾ |
| 3 இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான். | وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ. ﴿3﴾ |
| 4 இன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்). | وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ. ﴿4﴾ |
| 5 பிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான். | فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ. ﴿5﴾ |
| 6 (நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர், | سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ. ﴿6﴾ |
| 7 அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான். | إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ. ﴿7﴾ |
| 8 இன்னும், சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம். | وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ. ﴿8﴾ |
| 9 ஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக! | فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ. ﴿9﴾ |
| 10 (அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார். | سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ. ﴿10﴾ |
| 11 இன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான். | وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى. ﴿11﴾ |
| 12 (அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான். | ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ. ﴿12﴾ |
| 13 பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான். | ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ. ﴿13﴾ |
| 14 (இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார். | قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ. ﴿14﴾ |
| 15 இன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார். | وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ. ﴿15﴾ |
| 16 மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். | بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا. ﴿16﴾ |
| 17 மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும். | وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ. ﴿17﴾ |
| 18 முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது, | إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ. ﴿18﴾ |
| 19 இப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது). | صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ. ﴿19﴾ |