Loading date... | Loading Hijri date... | Loading time...

الغاشية

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 (நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்தி தொழுவீராக! هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ. ﴿1﴾
2 (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும். وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ. ﴿2﴾
3 (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.) عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ. ﴿3﴾
4 (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும். تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ. ﴿4﴾
5 கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும். تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ. ﴿5﴾
6 அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர. لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ. ﴿6﴾
7 (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது. لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ. ﴿7﴾
8 (நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்; وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ. ﴿8﴾
9 அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும். لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ. ﴿9﴾
10 (அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும். فِى جَنَّةٍ عَالِيَةٍۢ. ﴿10﴾
11 அதில் வீண் பேச்சை அவை செவியுறாது. لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ. ﴿11﴾
12 அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும். فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ. ﴿12﴾
13 அதில் உயரமான கட்டில்கள் இருக்கும். فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ. ﴿13﴾
14 இன்னும், (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும். وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ. ﴿14﴾
15 இன்னும், (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும். وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ. ﴿15﴾
16 இன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும். وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ. ﴿16﴾
17 ஆக, அவர்கள் ஒட்டகத்தின் பக்கம், அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா? أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ. ﴿17﴾
18 இன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா? وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ. ﴿18﴾
19 இன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா? وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ. ﴿19﴾
20 இன்னும், பூமியின் பக்கம், அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா? وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ. ﴿20﴾
21 ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான். فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ. ﴿21﴾
22 அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை. لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ. ﴿22﴾
23 எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ, إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ. ﴿23﴾
24 ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான். فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ. ﴿24﴾
25 நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது. إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ. ﴿25﴾
26 பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.) ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم. ﴿26﴾