الفجر
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா? | وَٱلْفَجْرِ. ﴿1﴾ |
| 2 பத்து இரவுகள் மீது சத்தியமாக! | وَلَيَالٍ عَشْرٍۢ. ﴿2﴾ |
| 3 இரட்டைப்படை மீது சத்தியமாக! ஒற்றைப்படை மீது சத்தியமாக! | وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ. ﴿3﴾ |
| 4 இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (மறுமை வந்தே தீரும்). | وَٱلَّيْلِ إِذَا يَسْرِ. ﴿4﴾ |
| 5 இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா? | هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ. ﴿5﴾ |
| 6 ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா? | أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ. ﴿6﴾ |
| 7 (உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்). | إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ. ﴿7﴾ |
| 8 அவர்கள் போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை. | ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ. ﴿8﴾ |
| 9 இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்துடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) | وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ. ﴿9﴾ |
| 10 இன்னும், பெரும் ஆணிகளுடைய ஃபிர்அவ்னுடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) | وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ. ﴿10﴾ |
| 11 அவர்கள் நகரங்களில் (பாவம் செய்வதில்) எல்லை மீறினார்கள். | ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ. ﴿11﴾ |
| 12 ஆக, அவர்கள் அவற்றில் விஷமத்தை (-மக்கள் மீது அநீதி செய்வதை) அதிகப்படுத்தினர். | فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ. ﴿12﴾ |
| 13 ஆகவே, உம் இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான். | فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ. ﴿13﴾ |
| 14 நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான். | إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ. ﴿14﴾ |
| 15 ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’’ எனக் கூறுகிறான். | فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ. ﴿15﴾ |
| 16 ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’’ எனக் கூறுகிறான். | وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ. ﴿16﴾ |
| 17 அவ்வாறல்ல! மாறாக, நீங்கள் அனாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அனாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை). | كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ. ﴿17﴾ |
| 18 இன்னும், ஏழையின் உணவுக்கு (நீங்கள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை. | وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ. ﴿18﴾ |
| 19 இன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் உடைய செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.) | وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا. ﴿19﴾ |
| 20 இன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள். | وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا. ﴿20﴾ |
| 21 அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, | كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا. ﴿21﴾ |
| 22 இன்னும், உம் இறைவன் வருவான், மலக்குகளோ அணி அணியாக நிற்கும் நிலையில். | وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا. ﴿22﴾ |
| 23 இன்னும், அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான். (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி பலன் தரும்? | وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ. ﴿23﴾ |
| 24 “என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!’’ எனக் கூறுவான், | يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى. ﴿24﴾ |
| 25 ஆக, அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ்வுடைய) தண்டனையை(ப் போன்று) ஒருவனும் தண்டிக்க முடியாது. (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக தண்டிப்பான்.) | فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ. ﴿25﴾ |
| 26 இன்னும், அவனுடைய (-அல்லாஹ்வுடைய) கட்டுதலை(ப் போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் மிகக் கடுமையாகக் கட்டப்படும்.) | وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ. ﴿26﴾ |
| 27 நிம்மதியடைந்த ஆன்மாவே! | يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ. ﴿27﴾ |
| 28 திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு! | ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ. ﴿28﴾ |
| 29 ஆக, என் அடியார்களில் சேர்ந்து விடு! | فَٱدْخُلِى فِى عِبَٰدِى. ﴿29﴾ |
| 30 இன்னும், என் சொர்க்கத்தில் நுழைந்து விடு! | وَٱدْخُلِى جَنَّتِى. ﴿30﴾ |