الليل
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 சூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்) | وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ. ﴿1﴾ |
| 2 பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது! | وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ. ﴿2﴾ |
| 3 ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! | وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ. ﴿3﴾ |
| 4 (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது. | إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ. ﴿4﴾ |
| 5 ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ, | فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ. ﴿5﴾ |
| 6 இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ, | وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ. ﴿6﴾ |
| 7 அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம். | فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ. ﴿7﴾ |
| 8 ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ, | وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ. ﴿8﴾ |
| 9 இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ, | وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ. ﴿9﴾ |
| 10 அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம். | فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ. ﴿10﴾ |
| 11 அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது). | وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ. ﴿11﴾ |
| 12 நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும். | إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ. ﴿12﴾ |
| 13 நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது! | وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ. ﴿13﴾ |
| 14 ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன். | فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ. ﴿14﴾ |
| 15 அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர. | لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى. ﴿15﴾ |
| 16 அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான். | ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ. ﴿16﴾ |
| 17 இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார். | وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى. ﴿17﴾ |
| 18 அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார். | ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ. ﴿18﴾ |
| 19 யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது. | وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ. ﴿19﴾ |
| 20 எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார். | إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ. ﴿20﴾ |
| 21 இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார். | وَلَسَوْفَ يَرْضَىٰ. ﴿21﴾ |