الضحى
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது! | وَٱلضُّحَىٰ. ﴿1﴾ |
| 2 இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது, | وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ. ﴿2﴾ |
| 3 (நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை. | مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ. ﴿3﴾ |
| 4 இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது. | وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ. ﴿4﴾ |
| 5 திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆக, நீர் திருப்தியடைவீர். | وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ. ﴿5﴾ |
| 6 உம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்). | أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ. ﴿6﴾ |
| 7 இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான். | وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ. ﴿7﴾ |
| 8 இன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான். | وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ. ﴿8﴾ |
| 9 ஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்! | فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ. ﴿9﴾ |
| 10 ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்! | وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ. ﴿10﴾ |
| 11 ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக! | وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. ﴿11﴾ |