التين
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா? | وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ. ﴿1﴾ |
| 2 சினாய் மலை மீது சத்தியமாக! | وَطُورِ سِينِينَ. ﴿2﴾ |
| 3 அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக! | وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ. ﴿3﴾ |
| 4 திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம். | لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ. ﴿4﴾ |
| 5 பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (முற்றிலும் பலவீனம் ஏற்படுகிற தள்ளாடும் வயதிற்கு) அவனைத் திருப்பினோம். | ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ. ﴿5﴾ |
| 6 எனினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ (அவர்கள் தள்ளாடும் வயதை அடைந்து நல்லமல் செய்ய முடியாமல் ஆகிவிட்டாலும்) அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு. | إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ. ﴿6﴾ |
| 7 ஆக, இ(த்தனை சான்றுகளை விவரித்த)தற்குப் பின்னர், (அடியார்களின் அமல்களை அல்லாஹ் விசாரிப்பதில், இன்னும் அவர்களுக்கு) கூலி கொடுப்பதில் உம்மை யார் பொய்ப்பிப்பார்? | فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ. ﴿7﴾ |
| 8 தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா? | أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ. ﴿8﴾ |