العلق
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக! | ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ. ﴿1﴾ |
| 2 அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். | خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ. ﴿2﴾ |
| 3 படிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான். | ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ. ﴿3﴾ |
| 4 அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான். | ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ. ﴿4﴾ |
| 5 மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான். | عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ. ﴿5﴾ |
| 6 அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான், | كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ. ﴿6﴾ |
| 7 (காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால். | أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ. ﴿7﴾ |
| 8 நிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது. | إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ. ﴿8﴾ |
| 9 (நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக! | أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ. ﴿9﴾ |
| 10 ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்? | عَبْدًا إِذَا صَلَّىٰٓ. ﴿10﴾ |
| 11 நீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)? | أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ. ﴿11﴾ |
| 12 அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)? | أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ. ﴿12﴾ |
| 13 நீர் அறிவிப்பீராக! அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால், | أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ. ﴿13﴾ |
| 14 நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? | أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ. ﴿14﴾ |
| 15 அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்). | كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ. ﴿15﴾ |
| 16 பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்). | نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ. ﴿16﴾ |
| 17 ஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். | فَلْيَدْعُ نَادِيَهُۥ. ﴿17﴾ |
| 18 நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம். | سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ. ﴿18﴾ |
| 19 அவ்வாறல்ல! அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (வணக்க வழிபாடுகள் மூலம் அவன் பக்கம்) நெருங்குவீராக! | كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩. ﴿19﴾ |