Wednesday, 12 August 2026 Hijri: 03:54:39 pm
MalayalamQuran.in
അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb
Quran translation reader

ഫാതിർ فاطر Fatir

സൂറത്ത് ഫാതിർ (Fatir), ഖുർആൻ അധ്യായം 35 — അറബി ആയത്തുകളും தமிழ் വിവർത്തനവും ഉൾപ്പെടെ 45 ആയത്തുകൾ വായിക്കുക. Read Surah Fatir with Arabic text and தமிழ் translation.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.

ٱلۡحَمۡدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ جَاعِلِ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلًا أُوْلِيٓ أَجۡنِحَةٖ مَّثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۚ يَزِيدُ فِي ٱلۡخَلۡقِ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ۝١
2

அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. இன்னும், அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை அனுப்பித்தருபவர் எவரும் இல்லை. இன்னும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

مَّا يَفۡتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحۡمَةٖ فَلَا مُمۡسِكَ لَهَاۖ وَمَا يُمۡسِكۡ فَلَا مُرۡسِلَ لَهُۥ مِنۢ بَعۡدِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ۝٢
3

மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள்.

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ هَلۡ مِنۡ خَٰلِقٍ غَيۡرُ ٱللَّهِ يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ۝٣
4

(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டுள்ளனர். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.

وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ۝٤
5

மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ ۝٥
6

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்.

إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمۡ عَدُوّٞ فَٱتَّخِذُوهُ عَدُوًّاۚ إِنَّمَا يَدۡعُواْ حِزۡبَهُۥ لِيَكُونُواْ مِنۡ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ۝٦
7

எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எவர்கள் நம்பிக்கைகொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

ٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٌ ۝٧
8

ஆக, எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகிறவரை வழிகெடுக்கிறான். தான் நாடுகிறவரை நேர்வழிபடுத்துகிறான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.

أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنٗاۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۖ فَلَا تَذۡهَبۡ نَفۡسُكَ عَلَيۡهِمۡ حَسَرَٰتٍۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَصۡنَعُونَ ۝٨
9

அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை இறந்து போன (-வறண்ட) ஊருக்கு நாம் ஓட்டி வருகிறோம். ஆக, அதன் மூலம் அந்த பூமியை அது இறந்ததற்குப் பின்னர் நாம் உயிர்ப்பிக்கிறோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் நிகழும்.

وَٱللَّهُ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَسُقۡنَٰهُ إِلَىٰ بَلَدٖ مَّيِّتٖ فَأَحۡيَيۡنَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ ۝٩
10

யார் கண்ணியத்தை நாடுபவராக இருக்கிறாரோ (அவர் அல்லாஹ்விடம் அதைத் தேடட்டும்.) ஏனெனில், அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. இன்னும், நல்ல செயல்கள் அவற்றை உயர்த்துகின்றன. கெட்ட சூழ்ச்சிகளை செய்பவர்கள் - அவர்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்.

مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَٰٓئِكَ هُوَ يَبُورُ ۝١٠
11

அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, அவள் கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவருக்கு நீண்ட வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் ஒருவருடைய வயது குறைக்கப்படுவதில்லை (அவை எல்லாம்) பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.

وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ۝١١
12

இரண்டு கடல்களும் சமமாகாது. இ(தன் நீரான)து மதுரமானதும், சுவையானதும் அதைக் குடிப்பதற்கு இலகுவானதும் ஆகும். (மற்ற) இதுவோ மிகவும் உவர்ப்பானதும் கசப்பானதும் ஆகும். (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான (ருசியான மீன்) இறைச்சியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்தக் கடல்களில்) கப்பல்கள் (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கிறீர், அவனது அருள்களிலிருந்து நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்தக் கப்பல்களில் உங்களை அவன் பயணிக்க வைத்தான்).

وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ۝١٢
13

இரவை பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. (இவற்றை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய) அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள்[1] (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (தானிய கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.

يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا يَمۡلِكُونَ مِن قِطۡمِيرٍ ۝١٣
14

நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவியுற மாட்டார்கள். அப்படியே அவர்கள் செவியுறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு அவர்கள் பதில் தர மாட்டார்கள். இன்னும், மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மையான செய்திகளை) அறிவிக்க முடியாது.

إِن تَدۡعُوهُمۡ لَا يَسۡمَعُواْ دُعَآءَكُمۡ وَلَوۡ سَمِعُواْ مَا ٱسۡتَجَابُواْ لَكُمۡۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا يُنَبِّئُكَ مِثۡلُ خَبِيرٖ ۝١٤
15

மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்.

۞ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ۝١٥
16

அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். இன்னும், (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்.

إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ ۝١٦
17

அது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.

وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ ۝١٧
18

பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், அதிலிருந்து (-அந்தப் பாவச்சுமையில் இருந்து) எதையும் சுமக்க முடியாது, அ(ழைக்கப்பட்ட ஆன்மாவான)து உறவினராக இருந்தாலும் சரியே (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுபவர்களைத்தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.

وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ وَإِن تَدۡعُ مُثۡقَلَةٌ إِلَىٰ حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَيۡءٞ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰٓۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفۡسِهِۦۚ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ۝١٨
19

குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.

وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ ۝١٩
20

இருள்களும் வெளிச்சமும் (சமமாகாது.)

وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ ۝٢٠
21

நிழலும் வெயிலும் (சமமாகாது.)

وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلۡحَرُورُ ۝٢١
22

உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரை செவியுற வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியுற வைப்பவராக நீர் இல்லை.

وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ ۝٢٢
23

நீர் இல்லை அச்சமூட்டி எச்சரிப்பவராகவே தவிர.

إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ ۝٢٣
24

நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர.

إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ ۝٢٤
25

இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்டத் தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடையத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் கொண்டு வந்தனர்.

وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ۝٢٥
26

பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். ஆக, (அவர்களுக்கு) நான் ஏற்படுத்திய மாற்றம் (-எனது தண்டனை) எப்படி இருந்தது?

ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ۝٢٦
27

(நபியே!) நீர் பார்க்கவில்லையா: நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். இன்னும், மலைகளில் வெண்மையான, சிவப்பான, இன்னும், கடும் கருப்பான பாதைகள் உடையவை உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன.

أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ ۝٢٧
28

மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.

وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ ۝٢٨
29

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆசைப்படுகிறார்கள்.

إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ۝٢٩
30

(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.

لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ۝٣٠
31

உமக்கு நாம் வஹ்யி அறிவித்த இந்த வேதம்தான் சத்தியமானதும் தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதும் ஆகும். நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ هُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرُۢ بَصِيرٞ ۝٣١
32

பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.

ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ فَمِنۡهُمۡ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ وَمِنۡهُم مُّقۡتَصِدٞ وَمِنۡهُمۡ سَابِقُۢ بِٱلۡخَيۡرَٰتِ بِإِذۡنِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ ۝٣٢
33

(அவர்கள் பெறப்போகும் சிறப்பு) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அவர்கள் அவற்றில் நுழைவார்கள்; அவற்றில் தங்கத்தினாலான காப்புகளும் (-வளையல்களும்) முத்து (ஆபரணங்களு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் ஆடைகள் அவற்றில் பட்டுத் துணியாகும்.

جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ ۝٣٣
34

அவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.

وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَذۡهَبَ عَنَّا ٱلۡحَزَنَۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٞ شَكُورٌ ۝٣٤
35

அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர (இன்பங்கள் நிறைந்த) இல்ல(மான சொர்க்க)த்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது.

ٱلَّذِيٓ أَحَلَّنَا دَارَ ٱلۡمُقَامَةِ مِن فَضۡلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٞ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٞ ۝٣٥
36

எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. அவர்களுக்கு மரணம் இருந்தால்தானே அவர்கள் மரணிப்பதற்கு. இன்னும், அதன் தண்டனை அவர்களை விட்டும் லேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்.

وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ نَارُ جَهَنَّمَ لَا يُقۡضَىٰ عَلَيۡهِمۡ فَيَمُوتُواْ وَلَا يُخَفَّفُ عَنۡهُم مِّنۡ عَذَابِهَاۚ كَذَٰلِكَ نَجۡزِي كُلَّ كَفُورٖ ۝٣٦
37

இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்).

وَهُمۡ يَصۡطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ أَوَلَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ فَذُوقُواْ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ ۝٣٧
38

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.

إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيۡبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ۝٣٨
39

அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக (ஒரு தலைமுறைக்குப் பின்னர் ஒரு தலைமுறையாக) ஆக்கினான். ஆக, எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகப்படுத்தாது. இன்னும், நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது.

هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا ۝٣٩
40

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற (-வணங்குகின்ற) உங்கள் (கற்பனை) தெய்வங்களைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்குக் காண்பியுங்கள். அல்லது, வானங்களில் (இருக்கும் படைப்புகளில்) அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது, (இணைவைத்து வணங்குகின்ற) அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கிறார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர வாக்களிப்பதில்லை.

قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا ۝٤٠
41

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.

۞ إِنَّ ٱللَّهَ يُمۡسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنۡ أَمۡسَكَهُمَا مِنۡ أَحَدٖ مِّنۢ بَعۡدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا ۝٤١
42

அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. ஆக, அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தபோது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர அதிகப்படுத்தவில்லை.

وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا ۝٤٢
43

பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.

ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا ۝٤٣
44

அவர்கள் பூமியில் பயணிக்க மாட்டார்களா? அப்படிப் பயணித்தால் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று அவர்கள் பார்ப்பார்களே! அ(க்காலத்தில் இருந்த)வர்கள் இ(க்காலத்தில் இருப்ப)வர்களை விட வலிமையால் பலமிக்கவர்களாக இருந்தனர். வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அல்லாஹ்வை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَكَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعۡجِزَهُۥ مِن شَيۡءٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ عَلِيمٗا قَدِيرٗا ۝٤٤
45

அல்லாஹ் மக்களை அவர்கள் செய்தவற்றுக்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் எந்த ஓர் உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கிறான். ஆக, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.

وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا ۝٤٥